தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுவனிடம் அத்துமீறியவர் 'போக்சோ' வழக்கில் கைது

 சிறுவனிடம் அத்துமீறியவர் 'போக்சோ' வழக்கில் கைது

 சிறுவனிடம் அத்துமீறியவர் 'போக்சோ' வழக்கில் கைது


ADDED : மார் 08, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மடிப்பாக்கம்: விளையாட்டில் ஆர்வமுள்ள சிறுவனிடம், ஆசை வார்த்தை கூறி, அத்துமீறிய நபர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். பின், மொபைல் போன் எண்ணிற்கு, 'ரீசார்ஜ்' செய்வதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

கடையில் புழுதிவாக்கத்தைச் சேர்ந்த பிரம்மாநந்த், 36, என்பவர், தான் கால்பந்து பயிற்சியாளர் என கூறியுள்ளார். இதை கேட்ட சிறு வன் தனக்கும் விளையாட்டில் ஆர்வம் இருப்பதாக, அவரிடம் கூறியுள்ளார்.

போதையில் இருந்த நபர், கோப்பைகள் மற்றும் பதக்கங்களை காட்டுகிறேன் எனக் கூறி, சிறுவனை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போ து, அந்த நபர் சிறுவனிடம் அத்துமீறியுள்ளார். இதைகண்ட, பிரம்மாநந்தனின் தந்தை, சிறுவனை காப்பாற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

பின், சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்படி, மடிப்பாக்கம் மகளிர் போலீசார், சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us