ADDED : ஜூலை 27, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடபழனி,நிலத்தை அளக்க விடாமல் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் குமார், 59. இவர் 'போட்டோ டிஜிட்டல் கலர்லேப்' நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம், வடபழனி விவேகானந்தா காலனி, 100 அடி சாலை அருகே உள்ளது.
இந்த இடத்தை அளப்பதற்கு, நேற்று முன்தினம் சர்வேயரை அழைத்து சென்றார். அப்போது, நிலத்தை அளக்க விடாமல் ரமேஷ் , 46, என்பவர் தகராறு செய்து, குமாரை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி கொ லை மிரட்டல் விடுத்தார்.
விசாரித்த வடபழனி போலீசார், சாலிகிராமத்தைச் சேர்ந்த ரமேைஷ கைது செய்தனர்.