/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மசாஜ் சென்டரை சூறையாடி பெண்ணை தாக்கியவர் கைது
/
மசாஜ் சென்டரை சூறையாடி பெண்ணை தாக்கியவர் கைது
ADDED : மார் 24, 2025 03:17 AM

சென்னை:நங்கநல்லுாரைச் சேர்ந்த 34 வயது பெண், கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள, மசாஜ் சென்டரில் பணிபுரிகிறார்.
இவருக்கும், பழவந்தாங்கல் வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்தையா தினேஷ்குமார், 33, என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும், ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், முத்தையா தினேஷ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்டது. இதனால், அவருடன் தகாத உறவில் இருந்த பெண் பேசுவதையே நிறுத்திவிட்டார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி, மசாஜ் சென்டருக்கு முத்தையா தினேஷ்குமார் வந்துள்ளார். அங்கிருந்த அப்பெண்ணிடம், 'உன்னால் தான் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. நான் நடத்தி வந்த துரித உணவக கடையையும் திறக்க முடியவில்லை. என்னுடன் இருந்த தகாத உறவையும் தொடர வேண்டும்' என, தகராறு செய்துள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முத்தையா தினேஷ்குமார், மசாஜ் சென்டரை சூறையாடி அப்பெண்ணையும், மசாஜ் சென்டர் மேலாளரையும் தாக்கி உள்ளார். இது குறித்து விசாரித்த ஆயிரம் விளக்கு போலீசார், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் முத்தையா தினேஷ்குமாரை, நேற்று கைது செய்தனர்.