/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்றவர் கைது
/
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்றவர் கைது
ADDED : மே 01, 2025 11:44 PM
சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்., டி - 20 கிரிக்கெட் போட்டி நடந்தது.
இப்போட்டிக்கான டிக்கெட்டுகள், வழக்கம்போல ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
அவர்களை குறிவைத்து கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபடுவோரை பிடிக்க, திருவல்லிக்கேணி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட, மேடவாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்த ராம்மோகன், 46, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 15,400 மதிப்பிலான, ஆறு டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.