/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி ஆவணம் வாயிலாக நிலத்தை விற்றவர் கைது
/
போலி ஆவணம் வாயிலாக நிலத்தை விற்றவர் கைது
ADDED : ஜூன் 13, 2025 12:00 AM

சென்னை, மேற்கு அண்ணாநகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் சுவாமிநாதன், 45. கொளத்துார் கண்ணதாசன் நகரில், 1,200 சதுரடி நிலத்தை பாபு என்பவரிடம், 2018ம் ஆண்டு, 55 லட்சம் ரூபாயக்கு மனைவி பெயரில் கிரையம் செய்துள்ளார்.
பின் வாங்கிய நிலத்திற்கு, சுவாமிநாதன் பட்டா வாங்க முயன்றபோது, போலி ஆவணம் வாயிலாக நிலத்தை, பாபு விற்றது தெரிய வந்தது.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவில், 2020ம் ஆண்டு புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பாபு, 62, மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட பாபுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
***