/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆன்லைனில் போதை மாத்திரை விற்றவர் கைது
/
ஆன்லைனில் போதை மாத்திரை விற்றவர் கைது
ADDED : டிச 24, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்: ஆந்திராவைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் மெடரமிட்லா மேகவர்தன், 20, முங்கரா ஸ்ரவன் குமார், 22. இருவரும், ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி அருகே, கடந்த நவ., 27ல் சென்றபோது சந்தேகத்தில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம், 'டைடால்' என்ற 200 போதை மாத்திரை இருப்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக போதை மாத்திரை சப்ளை செய்த சதானந்த் பாண்டே, 54, என்பவரை போலீசார் நேற்று முன்தினம், மும்பையில் கைது செய்தனர்.