ADDED : நவ 04, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி:வேளச்சேரி, ஓரண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷாலினி, 34. நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள சாலையோர கடையில் பிரியாணி வாங்க சென்றார்.
அப்போது, அதே கடையில் போதையில் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த நபர், ஷாலினியை நீண்ட நேரம் உற்று பார்த்துள்ளார்.
'எதற்கு என்னை குறுகுறுவென பார்க்கிறாய்; உனக்கு அக்கா, தங்கச்சி இல்லையா' என, அப்பெண் கேட்டுள்ளார்.
அதற்கு போதை நபர், 'அப்படித்தான் பார்ப்பேன்' என கூறியதுடன், ஷாலினியை ஒருமையில் பேசி உள்ளார். இது குறித்து ஷாலினி, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், நங்கநல்லுாரைச் சேர்ந்த ரமேஷ், 40, என்பது தெரிந்தது. பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார், நேற்று, ரமேஷை கைது செய்தனர்.