ADDED : செப் 11, 2025 02:32 AM
எம்.கே.பி.நகர், எம்.கே.பி.நகரில், மைத் துனரை வெட்டிய மாமாவை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, கோல்டன் காம்ப்ளக்ஸ் 1வது செக்டரைச் சேர்ந்தவர் நீலகண்டன், 50. இவரது மகள் நித்திஷா, 20, மகன் சுபனேஷ், 17.
நித்திஷாவும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும், கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால், மனவிரக்தியடைந்த நீலகண்டன், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில், தனக்கும், மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், 22, முல்லை நகர், எம்.எஸ்.மஹால் அருகே நின்றிருந்த நித்திஷாவின் தம்பி சுபனேஷிடம் மதுபோதையில் வீண் தகராறு செய்து, கத்தியால் வெட்டி தப்பினார். சுபனேைஷ அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து விசாரித்த எம்.கே.பி.நகர் போலீசார் ராஜே ைஷ கைது செய்தனர்.