ADDED : டிச 12, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார், 30; சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 42, என்பவருக்கும், குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அஜித்குமார், அரிவாளால் மதன்குமாரை வெட்டி உள்ளார். இதனால் மதன்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து, கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது ஏற்கனவே, கொலை முயற்சி உட்பட மூன்று வழக்குகள் இருக்கின்றன.