/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
/
வாலிபரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
ADDED : மே 23, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யானைகவுனி, பழைய வண்ணாரப்பேட்டை, சுப்புராயன் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 23; தங்க நகை பட்டறையில் ஆச்சாரியாக வேலை பார்க்கிறார். கடந்த, 20 ம் தேதி, யானை கவுனி, முருகப்பா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் வழிமறித்து சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை பறித்து, தப்பியுள்ளார்.
புகாரின் படி யானைகவுனி போலீசார் விசாரித்தனர். என்.எஸ்.சி., போஸ் சாலை நடைபாதையில் வசித்து வந்த வேலாயுதம், 36, என்பவரை, நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, மொபைல் போனை, கடையில் விற்று பணத்தை செலவு செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட, வேலாயுதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.