தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெயின்டருக்கு கத்திக்குத்து :ரவுடிசத்தில் ஈடுபட்டவர் கைது

பெயின்டருக்கு கத்திக்குத்து :ரவுடிசத்தில் ஈடுபட்டவர் கைது

பெயின்டருக்கு கத்திக்குத்து :ரவுடிசத்தில் ஈடுபட்டவர் கைது


UPDATED : ஜூலை 09, 2026 06:36 PM

ADDED : ஜூலை 09, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 06:36 PM ADDED : ஜூலை 09, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆர்.நகர்: சாலையில் வழிவிடுமாறு கேட்ட பெயின்டரை, கத்தியால் குத்தி ரவுடிசத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

எம்.ஜி.ஆர்., நகர், அம்மன் கோவில் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வினோத், 31; பெயின்டர்.

இவர், கடந்த 7ம் தேதி இரவு மனைவி மற்றும் குழந்தையுடன், தாய் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.

அப்போது தெருவை மறித்து நின்றிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், 44 என்பவரிடம் வழிவிடுமாறு கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், வீண் தகராறில் ஈடுபட்டதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்தை குத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

பலத்த காயமடைந்த வினோத்தை, அங்கிருந்தோர் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து வழக்கு பதிந்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us