/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுக சிறுக 400 கிலோ இரும்பு 'மெட்ரோ'வில் திருடியவர் கைது
/
சிறுக சிறுக 400 கிலோ இரும்பு 'மெட்ரோ'வில் திருடியவர் கைது
சிறுக சிறுக 400 கிலோ இரும்பு 'மெட்ரோ'வில் திருடியவர் கைது
சிறுக சிறுக 400 கிலோ இரும்பு 'மெட்ரோ'வில் திருடியவர் கைது
ADDED : ஜன 18, 2025 12:24 AM
அண்ணா நகர், கோயம்பேடு - திருமங்கலம், 100 அடி சாலை அருகில், நேற்று முன்தினம், திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்னாகுமார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக, பெரிய சாக்கு பையுடன், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை, போலீசார் மடக்கி பிடித்து சோதித்தனர். அவரது பையில், பெரிய அளவிலான, இரும்பு 'போல்டு, நட்'டுகள் இருந்தன.
சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, திருமங்கலம், பாடி குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன், 27, என்பது தெரிந்தது.
மது குடிப்பதற்காக, மெட்ரோ பணியிடத்தில் இருந்து இரும்புகளை சிறுக, சிறுக திருடி, ரோகிணி தியேட்டர் அருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். இதையடுத்து, 400 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடில் திருட்டு நடந்ததால் கோயம்பேடு போலீசாரிடம், வெங்கடேசன் ஒப்படைக்கப்பட்டார்.