/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் பணியிடத்தில் இரும்பு திருடி விற்றவர் கைது
/
மெட்ரோ ரயில் பணியிடத்தில் இரும்பு திருடி விற்றவர் கைது
மெட்ரோ ரயில் பணியிடத்தில் இரும்பு திருடி விற்றவர் கைது
மெட்ரோ ரயில் பணியிடத்தில் இரும்பு திருடி விற்றவர் கைது
ADDED : மே 25, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, :ஓட்டேரி, ஸ்ட்ராஹன்ஸ் சாலையில், மாநகராட்சி மண்டல அலுவலகம் முன், மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு சிலர் அத்துமீறி நுழைந்து, இரும்பு கம்பிகளை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இரும்பு கம்பிகளை திருட முயன்ற, புளியந்தோப்பை சேர்ந்த பிரதீப், 24, என்பவரை மெட்ரோ பணியாளர்கள் கையும் களவுமாக பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், இரும்பு கம்பிகளை திருடும் பிரதீப், அதை 'நீக்ரோ' அப்பு, 24, என்பவருடன் சேர்ந்து விற்றது தெரியவந்தது. பிரதீப்பை கைது செய்த போலீசார், அப்புவை தேடி வருகின்றனர்.