ADDED : டிச 15, 2024 08:33 PM
அ நிறம் | அளவு
சென்னை:கீழ்ப்பாக்கம், காமராஜர் நகர், லட்சுமி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27; ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர். கடந்த, 12ம் தேதி அன்று அதிகாலை பணியிலிருந்தபோது, அவரது மொபைல் போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
சம்பவம் குறித்து, ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ராயப்பேட்டை உசேன் தெருவைச் சேர்ந்த முகமது ஜாவித், 24, மொபைல் போனை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
