ADDED : ஏப் 13, 2026 11:00 PM
அ நிறம் | அளவு
திருவல்லிக்கேணி: ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மொபைல் போனை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 31. இவர், அவசர கால சேவையான '108' ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
கடந்த, 11ம் தேதி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில், மொபைல் போனை சார்ஜரில் போட்டுவிட்டு உறங்கினார். சிறிது நேரம் கழித்து கண் விழித்தபோது, அவரது மொபைல்போன் திருடுபோனது தெரியவந்தது.
வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஹரிகிருஷ்ணன், 32, என்பவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
