/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் திருடியவர் கைது
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் திருடியவர் கைது
ADDED : நவ 10, 2025 01:39 AM
துரைப்பாக்கம்: ஐ.டி., பெண் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய ஆட்டோ ஓட்டுநரை, பத்து மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
துரைப்பாக்கம், வி.பி.ஜி., அவென்யூவில் வாடகை வீட்டில் வசிப்பவர் சிவகவுரிசங்கர், 30. ஐ.டி., ஊழியர்.
நேற்று முன்தினம் மாலை, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த வீட்டின் உரிமையாளர், சிவகவுரிசங்கரிடம் கூறினார்.
அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 சவரன் நகை திருடு போனது தெரிந்தது.
தகவலின்பேரில், துரைப்பாக்கம் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஜேக்கப், 28, என்பவர், நகையை திருடியது தெரிந்தது.
சிவகவுரி தனியாக இருப்பதை நோட்டமிட்ட இவர், பணிக்கு சென்ற நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியுள்ளார்.
நேற்று அதிகாலை இவரை கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர்.
சம்பவம் நடந்த பத்து மணி நேரத்தில், இவர் போலீசில் சிக்கி உள்ளார்.

