/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விநாயகர் கோவிலில் சிலை திருடியவர் கைது
/
விநாயகர் கோவிலில் சிலை திருடியவர் கைது
ADDED : ஜன 13, 2025 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்,:அம்பத்துார், கிருஷ்ணாபுரம் வினைதீர்த்த விநாயகர் கோவிலை திறக்க, கடந்த 7ம் தேதி காலை 6:00 மணியளவில், அர்ச்சகர் பால சுப்பிரமணியன், 49, சென்றுள்ளார். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கருவறையில் இருந்த, விநாயகர், முருகன், வள்ளி- தெய்வானை, நடராஜர் சிலைகள் திருட்டு போயிருந்தன. இது குறித்து அம்பத்துார் போலீசார் விசாரித்தனர். இதில், அம்பத்துார் கல்யாணபுரத்தைச் சேர்ந்த பாபு, 29, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், ஐந்து சிலைகள், பூஜை சாமான்கள், உண்டியல் மற்றும் டி.வி.எஸ் 50 ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.