/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகைகளை திருடி ஊர் சுற்றியவர் கைது
/
நகைகளை திருடி ஊர் சுற்றியவர் கைது
ADDED : மே 31, 2025 03:30 AM

திருமங்கலம்:திருமங்கலம், 18வது பிரதான சாலை, திருவள்ளூர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 62; சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நிர்வாக பிரிவில்பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 27ம் தேதி, இவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள், பித்தளை குத்துவிளக்குகள் உள்ளிட்டவை திருடுபோனது.
திருமங்கலம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, திருமங்கலத்தில் சுற்றி திரிந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 47, என்பவரை, ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் ஹரிஹரன் வீட்டில் திருடியது தெரிந்தது. அவரிடமிருந்து, 3 சவரன் நகைகள், மூன்று குத்து விளக்குகளை பறிமுதல் செய்த போலீசார், நேற்று அவரை சிறையில் அடைத்தனர்.