/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலில் குத்து விளக்கு திருடியவர் கைது
/
கோவிலில் குத்து விளக்கு திருடியவர் கைது
ADDED : டிச 07, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சூளை பகுதியில், அறநிலையத் துறைக்கு சொந்தமான நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், இரண்டு குத்து விளக்குகளை திருடி தப்ப முயன்றார்.
அவரை கோவில் நிர்வாகி தமிழ்ச் செல்வன், 50, பிடித்து, வேப்பேரி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், புளியந்தோப்பு விநாயகம், 39, என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.