/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெட்ரோல் 'பங்க்' ஊழியரிடம் பணம் திருடியவர் பிடிபட்டார்
/
பெட்ரோல் 'பங்க்' ஊழியரிடம் பணம் திருடியவர் பிடிபட்டார்
பெட்ரோல் 'பங்க்' ஊழியரிடம் பணம் திருடியவர் பிடிபட்டார்
பெட்ரோல் 'பங்க்' ஊழியரிடம் பணம் திருடியவர் பிடிபட்டார்
ADDED : மே 02, 2025 12:14 AM
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, சுந்தரம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மனோபாரதி, 29, எண்ணுார் நெடுஞ்சாலையில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'கில் பணி புரிகிறார். கடந்த 29ம் தேதி அதிகாலை, ஆட்டோ ஒன்றிற்கு 'காஸ்' நிரப்பி, பணப்பையை அருகே வைத்து விட்டு, மற்றொரு டூ - வீலருக்கு பெட்ரோல் போட சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது, பணப்பை திருட்டு போயிருந்தது. அதில், 21,000 ரூபாய் இருந்துள்ளது. இது குறித்து, மனோபாரதி, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாரிமுத்து, 25, வியாசர்பாடியைச் சேர்ந்த ஜோயல், 24, என தெரிய வந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், 10,500 ரூபாய், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மாரிமுத்து மீது ஆறு வழக்குகள் உள்ளன.