ADDED : மே 06, 2025 01:08 AM

அ நிறம் | அளவு
புழல்,
புழல், அறிஞர் அண்ணா மூன்றாவது தெருவில் வசிப்பவர் விஜயகுமார், 28. இவர், நேற்று முன்தினம் மாலை, 'டியோ' இருசக்கர வாகனத்தில் வீட்டருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஒருவர், விஜயகுமாரை மடக்கி, கத்தியை காட்டி மிரட்டி, அவரது வாகனத்தை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து, புழலை சேர்ந்த சஞ்சய் மணி, 21 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது, கொலை, போக்சோ, வழிப்பறி உள்பட ஏழு குற்ற வழக்குகள் உள்ளன.
