/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் வந்த பெண்ணின் 'ஹேண்ட் பேக்' திருடியவர் கைது
/
ஏர்போர்ட் வந்த பெண்ணின் 'ஹேண்ட் பேக்' திருடியவர் கைது
ஏர்போர்ட் வந்த பெண்ணின் 'ஹேண்ட் பேக்' திருடியவர் கைது
ஏர்போர்ட் வந்த பெண்ணின் 'ஹேண்ட் பேக்' திருடியவர் கைது
ADDED : ஆக 25, 2025 01:31 AM
சென்னை; சென்னை விமான நிலையத்தில், பெண்ணின் மடிக்கணினி அடங்கிய ஹேண்ட் பேக்கை திருடிச் சென்றவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரி, லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா, 36. கடந்த 21ம் தேதி வெளிநாட்டிலிருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்து இருந்தார்.
அப்போது மடிக்கணினி மற்றும் கிரெடிட் கார்டு அடங்கிய ஹேண்ட் பேக்கை, அருகே வைத்துவிட்டு உறவினர் வருகிறாரா என்பதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அவரது ஹேண்ட் பேக் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், மண்ணடி பகுதியைச் சேர்ந்த முகைதீன் அக்பர் உசேன், 52 என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை மீட்டனர்.