/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுநர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது
/
ஓட்டுநர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது
ADDED : பிப் 13, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி புதுநகர்,மணலி, ஆண்டார்குப்பம் செக் போஸ்ட் பகுதியில், நேற்று முன்தினம், மணலி புதுநகர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, லாரி ஓட்டுநர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த மாத்துாரைச் சேர்ந்த ரமேஷ், 44, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், லாரி கம்பெனியில் எழுத்தராக பணியாற்றி வரும் இவர், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி, லாரிகள் வாயிலாக சென்னைக்கு கடத்தி வந்தது தெரிந்தது.
அவரிடமிருந்து, 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

