தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உரிய ஆவணங்களின்றி மணல் எடுத்து சென்றவர் கைது

உரிய ஆவணங்களின்றி மணல் எடுத்து சென்றவர் கைது

உரிய ஆவணங்களின்றி மணல் எடுத்து சென்றவர் கைது


ADDED : மார் 30, 2025 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 12:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர், சென்னை கலெக்டர் அலுவலகம், புவியியல் மற்றும் சுங்கத்துறையின் உதவி புவியாளர் சுபத்ரா தேவி தலைமையிலான குழுவினர், திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலை, எல்லையம்மன் கோவில் சந்திப்பில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியே வந்த டாரஸ் லாரியை மடக்கி விசாரித்தனர். அப்போது, உரிய ஆவணங்களின்றி லாரியில் மணல் ஏற்றி செல்வது தெரியவந்தது. அதிகாரிகள் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுனரான, திருவள்ளூர், தாமரை பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், 38, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us