/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டோல்' கட்டணத்தை தவிர்க்க நுாதன மோசடி போலீஸ் அட்டையுடன் வலம் வந்தவர் கைது
/
'டோல்' கட்டணத்தை தவிர்க்க நுாதன மோசடி போலீஸ் அட்டையுடன் வலம் வந்தவர் கைது
'டோல்' கட்டணத்தை தவிர்க்க நுாதன மோசடி போலீஸ் அட்டையுடன் வலம் வந்தவர் கைது
'டோல்' கட்டணத்தை தவிர்க்க நுாதன மோசடி போலீஸ் அட்டையுடன் வலம் வந்தவர் கைது
ADDED : ஜூலை 01, 2025 12:28 AM

சென்னை, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க, போலியான போலீஸ் அடையாள அட்டையுடன் வலம் வந்த கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
எர்ணாவூர் - சுனாமி குடியிருப்பு அருகே, ரோந்து பணியில் ஈடுபட்ட எண்ணுார் போலீசார், காரில் மது அருந்திய தினேஷ்குமார், சக்திகுமார் ஆகியோரை பிடித்தனர். அவர்களின் காரின் பதிவெண்ணை சோதித்தபோது, போலியானது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, காரை சோதனையிட்டபோது, உள்ளே மற்றொரு கார் பதிவெண் மற்றும் சக்திகுமார் தம்பி ரவிகுமார் பெயரில், போலிபோலீஸ் அடையாள அட்டைகள் இருந்துள்ளன.
இதுதொடர்பாக, எண்ணுார் ரவிகுமார், 28, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், சில மாதங்களுக்கு முன், ரவிகுமாரின் கார் காணாமல் போனது. அப்போது போலீசாருடன் பயணித்து தன் காரை தேடி பல ஊர்களுக்கு பயணித்தார்.
அப்போது, சுங்கச்சாவடிகளில் காரை நிறுத்தும்போது விசாரணைக்கு செல்வதாக போலீசார் கூறினால், கட்டணம் பெறாமல் அனுமதித்துள்ளனர்.
இதை பார்த்த ரவிகுமார், கடனுக்கு கார் ஒன்றை வாங்கி, போலீஸ்காரர் ஒருவரின் அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து, அதை வைத்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் சென்று வந்துள்ளார்.
அதேபோல், மற்றொருவர் காரின் பதிவெண்ணை எடுத்து, தன் காரில் ஒட்டி விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார். அதற்கான அபராத தொகை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, அந்த பதிவெண் உரிமையாளருக்கு சென்றுள்ளது. அவர்களும், விபரம் தெரியாமல் தொடர்ச்சியாக அபராதத் தொகையை கட்டி வந்துள்ளனர்.
எண்ணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிகுமார், 28, என்பவரை கைது செய்து, விசாரணைக்கு பின், சிறையில் அடைத்தனர்.