/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விடுதி மேலாளரிடம் திருடியவர் சிக்கினார்
/
விடுதி மேலாளரிடம் திருடியவர் சிக்கினார்
ADDED : நவ 18, 2025 04:48 AM
வடக்கு கடற்கரை: மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றுபவர் ரம்ஜான் அலி, 42. இவர், கடந்த 14ம் தேதி, விடுதியில் உள்ள அறையில், காற்று வசதிக்காக கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார்.
மறுநாள் எழுந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த, 2,000 ரூபாய், மொபைல் போன் மற்றும் கைப்பை திருடு போனது தெரிந்தது.
இது குறித்த புகாரின்படி, வடக்கு கடற்கரை போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரை சேர்ந்த சையது அபுதாகிர், 44, என்பதும், இவர் மண்ணடியில் உள்ள உணவகத்தில் வேலை செய்ததும் தெரிந்தது.
அவரிடமிருந்து, 1,000 ரூபாய், மொபைல் போன், கைப்பை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

