/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
/
மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
ADDED : பிப் 09, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே, மின் மாற்றியில் ஏறிய நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கிராமத்தில் ஒரு நபர், நேற்று மதியம் மின்மாற்றியில் ஏறியுள்ளார். திடீரென அதிலுள்ள கம்பியை பிடித்து தொங்க முயற்சித்துள்ளார்.
அப்போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததார். தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார், மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் உடலை மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், இறந்தவர் நந்திவரத்தைச் சேர்ந்த வீரபத்திரன், 37, என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.