/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3வது மாடியில் இருந்து விழுந்தவர் பலி
/
3வது மாடியில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : ஜூலை 28, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை: உத்தர பிரதேசம் மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்குமார், 24. வண்டலுாரில் உள்ள ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனத்தில் கட்டுமான பணி செய்து வந்தார்.
நேற்று, இ.சி.ஆர்., அக்கரையில் உள்ள ஒரு வீட்டில், மூன்றாவது மாடியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி, மேலிருந்து கீழே விழுந்தார்.
இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.