தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

 மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

 மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு


ADDED : ஏப் 08, 2026 10:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 10:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓட்டேரி: மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த டீ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓட்டேரி, வள்ளுவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்பாபு, 53. தாயுடன் வசித்து வரும் இவர், இருசக்கர வாகனத்தில் டீ வியாபாரம் செய்து வந்தார்.

ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் வீட்டுக்கு வந்தவர், சாப்பிட்டு விட்டு முதல் தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு மதில் சுவர் மீது அமர்ந்தபடி, மொபைல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கால் தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஓட்டேரி போலீசார் சதீஷ்பாபுவின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us