ADDED : மார் 12, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: கிருஷ்ணா கால்வாயில் வழுக்கி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்.
திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் சிவகுமார், 52; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் நண்பர்களுடன், ஆந்திர மாநிலம் ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் சென்றார்.
குளிப்பதற்காக கால்வாயில் இறங்கிய சிவகுமார், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த தேர்வாய் கண்டிகை சிப்காட் தீயணைப்பு வீரர்கள், தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று பென்னலுார்பேட்டை அடுத்த கரகம்பாக்கம் கிராமத்தை ஒட்டி, கிருஷ்ணா கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
