தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லாரி 'ரிவர்ஸ்' எடுக்க உதவியர் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

லாரி 'ரிவர்ஸ்' எடுக்க உதவியர் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

லாரி 'ரிவர்ஸ்' எடுக்க உதவியர் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு


UPDATED : ஆக 11, 2026 10:09 PM

ADDED : ஆக 11, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 10:09 PM ADDED : ஆக 11, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்றத்துார்: டேங்கர் லாரி 'ரிவர்ஸ்' எடுக்க உதவியர், சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 46; கட்டட தொழிலாளி. இவர், குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில் தங்கி, அதே பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.

கட்டுமான பணித்தளத்தில், நேற்று மதியம் தண்ணீர் நிரம்பிக்கொண்டு வந்த டேங்கர் லாரி, 'ரிவர்ஸ்' எடுப்பதற்காக, பின்னால் இருந்து ஏழுமலை உதவியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுநரான தங்கராஜ், 40, என்பவரை, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us