ADDED : செப் 10, 2026 02:57 AM
அ நிறம் | அளவு
சென்னை: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் கணேசன், 52. சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தின், முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க, கடந்த 7ம் தேதி வந்தார்.
அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு '108' ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
