தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் மீட்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் மீட்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் மீட்பு


ADDED : செப் 15, 2026 05:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில், ரயில் ஏறும்போது தவறி விழுந்த வடமாநில நபரை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

தாம்பரத்தில் இருந்து, நேற்று முன்தினம் மாலை, நாக்பூருக்கு செல்லும் நாகூன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. சிறப்பு ரயில் என்பதால், வடமாநில நபர்கள் ஏராளமானோர் ரயிலில் முண்டியடித்து ஏறினர்.

ரயில் புறபட்டதும் வடமாநில நபர் ஒருவர், ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது, அந்நபர் தவறி ரயிலின் கீழே விழுந்தார். சக பயணியர் கூச்சல் போட்டதும் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், அந்நபரை பத்திரமாக மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us