/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனுக்கு 'தொல்லை ' இளைஞருக்கு 14 ஆண்டு சிறை
/
சிறுவனுக்கு 'தொல்லை ' இளைஞருக்கு 14 ஆண்டு சிறை
ADDED : ஆக 20, 2025 03:04 AM

ஆவடி,ஆவடியில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு, ஆவடி, பாலவேடு பகுதியைச் சேர்ந்த பிரவீன், 19, என்பவர் கடந்த 2023 ஏப்., 14ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரித்த போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.