/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் நண்பரை வெட்டியோருக்கு சிறை
/
குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் நண்பரை வெட்டியோருக்கு சிறை
குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் நண்பரை வெட்டியோருக்கு சிறை
குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் நண்பரை வெட்டியோருக்கு சிறை
ADDED : ஏப் 27, 2025 01:47 AM
சென்னை:சென்னை, ஓட்டேரி செல்வபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது நண்பர்கள் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கன்னியப்பன், 33, வேலுார் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த சம்பத்ராவ், 32.
மூவரும், அவ்வப்போது, ஒன்றாக சேர்ந்து மது அருந்துவர். ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை, கார்மேகம் தவிர்த்துள்ளார். எனினும், மது குடிக்க பணம் கேட்டு, கார்மேகத்தை நண்பர்கள் மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், 2021, பிப்., 8ல் கார்மேகத்திடம், மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், நண்பர்கள் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த கார்மேகம், சிகிச்சைக்கு, பின் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து, தலைமை செயலக காலனி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 19வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் தனசேகரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கன்னியப்பன், சம்பத்ராவ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே இருவருக்கும், தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.