/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவருக்கு சிறை
/
மின் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவருக்கு சிறை
ADDED : மே 02, 2025 12:20 AM
சென்னை, கொடுங்கையூர் மின் வாரிய அலுவலகத்தில், மின் கணக்கீட்டாளராக பணியாற்றியவர் பெரியசாமி. இவர், 2006ல், கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் வீட்டில், மின் பயன்பாட்டை பதிவு செய்வதற்காக மின் கணக்கீட்டு அட்டையை கேட்டுள்ளார்.
அப்போது, பெரியசாமியை பணி செய்ய விடாமல் தடுத்து, வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறி, பிரகாஷ் தாக்கியுள்ளார். இதில், பெரியசாமி காயமடைந்தார். கொடுங்கையூர் போலீசார் பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை 19வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் நடந்தது. போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் தனசேகரன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பிரகாஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.