தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உறவினர்களுக்குள் தகராறு தாக்கப்பட்டவர் உயிரிழப்பு

 உறவினர்களுக்குள் தகராறு தாக்கப்பட்டவர் உயிரிழப்பு

 உறவினர்களுக்குள் தகராறு தாக்கப்பட்டவர் உயிரிழப்பு


ADDED : மார் 05, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லாவரம்: பல்லாவரத்தில், உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்லாவரத்தை அடுத்த திரிசூலம், பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 48. ஓட்டுநர். பிப்., 22ம் தேதி, போதையில் வீட்டின் முன் நின்று சத்தம் போட்டுள்ளார்.

அப்போது, அதே தெருவை சேர்ந்த உறவினரான செல்வராஜ், 51, என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், வெங்கடேசனை தாக்கிய செல்வராஜ், அவரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

கீழே விழுந்த வெங்கடேசனுக்கு, தலையில் காயம் ஏற்பட்டு, மூக்கு, காது வழியாக ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

வெங்கடேசனின் மனைவி ராதா கொடுத்த புகாரின்படி, பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து, செல்வராஜை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, பல்லாவரம் போலீசார், மரணத்தை விளைவிக்கும் குற்றம் என, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us