/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேரி சிலையை உடைத்தவர் மன நல காப்பகத்தில் சேர்ப்பு
/
மேரி சிலையை உடைத்தவர் மன நல காப்பகத்தில் சேர்ப்பு
ADDED : மார் 22, 2025 12:25 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெரு - சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில், குழந்தை இயேசுவை தாங்கிய மேரி சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, இருவர் சண்டையிட்டுக் கொண்டதில், ஒருவர் கல்லை துாக்கி எறிந்துள்ளார்.
இதில், மேரி சிலை மற்றும் குழந்தை இயேசு சிலையின் தலைபாகம் உடைந்து சேதமானது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தெரிய வந்ததாவது:
அதே பகுதியைச் சேர்ந்த விக்கி, 26, என்பவருக்கும், அவரது சகோதரர் டேனியல் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அண்ணனை அடிப்பதற்காக, கீழே கிடந்த கல்லை எடுத்து விக்கி வீசியுள்ளார்.
அந்த கல், மேரி சிலையில் பட்டு சேதமடைந்துள்ளது. மேலும், விக்கி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.