/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவருக்கு 'மாவுக்கட்டு'
/
டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவருக்கு 'மாவுக்கட்டு'
டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவருக்கு 'மாவுக்கட்டு'
டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவருக்கு 'மாவுக்கட்டு'
ADDED : நவ 01, 2025 01:57 AM

அயனாவரம்: டெலிவரி ஊழியரிடம் போன் பறித்தவர், தப்ப முயற்சித்த போது கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன், 52; டெலிவரி ஊழியர். கடந்த 29ம் தேதி இரவு பணி முடிந்து, கொன்னுார் நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர், மொபைல் போனை பறித்து தப்பினார். அயனாவரம் போலீசாரின் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது புளியந்தோப்பைச் சேர்ந்த பழைய குற்றவாளியான சந்தோஷ், 21, என்பது தெரிய வந்தது.
போலீசார் அவரை கைது செய்ய முயலும்போது, தப்ப முயன்று கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விசாரணைக்குபின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.