ADDED : அக் 24, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர் மேற்கு, முருகப்பா நகர் துவங்கி, மணலி - எம்.எப்.எல்., சந்திப்பு வரையிலான, மணலி விரைவு சாலையை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
சென்னை துறைமுகம் நோக்கி செல்லும், கன்டெய்னர் மற்றும் கனரக வாகனங்களுக்கும் இச்சாலை பிரதானம்.
இந்நிலையில், மணலி விரைவு சாலையின், 7 கி.மீ., துாரத்தில், 200க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், பாதிக்கும் மேல் ஒளிர்வதில்லை.
காரணம், முறையான பராமரிப்பில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில், முன் செல்லும் கனரக வாகனங்கள் தெரியாமல் பைக், ஸ்கூட்டர் மற்றும் இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
எனவே, தெருவிளக்குகளை பராமரிக்கும், மாநகராட்சி - மின்பிரிவு அதிகாரிகள், உடனடியாக கவனித்து தீர்வு காண வேண்டும்.
- கே.விஜய், 34, மணலிபுதுநகர்.