sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மணலிபுதுநகர் பேருந்து நிலைய 10 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிப்பு?

/

 மணலிபுதுநகர் பேருந்து நிலைய 10 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிப்பு?

 மணலிபுதுநகர் பேருந்து நிலைய 10 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிப்பு?

 மணலிபுதுநகர் பேருந்து நிலைய 10 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிப்பு?


ADDED : பிப் 23, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 23, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலிபுதுநகர்: மணலிபுதுநகர் பேருந்து நிலைய வளாகத்தில், 10 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மணலிபுதுநகர் 80 அடி சாலையில் மார்க்கெட் அருகே, 10 கிரவுண்ட் நிலத்தில், 1980களில் இருந்து பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. பின் நாளில், பல காரணங்களால் அந்த பேருந்து நிலையம் செயல்படவில்லை.

மாறாக, மாநகர பேருந்துகள், 80 அடி சாலை வழியாக, திருவள்ளுவர் சிலை, அய்யா கோவில் சந்திப்பு, ஆண்டார்குப்பம் இணைப்பு சாலை வழியாக, பொன்னேரி நெடுஞ்சாலைக்கு சென்று விடுகிறது.

இதற்கிடையில், மாநகர பேருந்துகள் வந்து செல்லும் விபரம் தெரியாமல், மணலிபுதுநகர் மக்கள், 50 - 250 ரூபாய் வரை செலவழித்து, ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் இந்த கட்டணம் இருமடங்காகிறது.

தவிர, பேருந்து நிலையம் செயல்பட்டு வந்த, 10 கிரவுண்ட் நிலமும் கேட்பாரற்று கிடப்பதால், ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பேருந்து நிலையத்தை முழுமையாக புனரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இது குறித்து மணலி புதுநகரைச் சேர்ந்த பாண்டியன், 45, கூறியதாவது:

மணலிபுதுநகர் பேருந்து நிலையம், 1980களில் இருந்து செயல்பட்டு வந்துள்ளது.

திடீரென, திருவள்ளுவர் சிலை - அய்யா கோவில் சந்திப்பிற்கு மாற்றப்பட்டது. தற்போது, எங்குமே நிற்காமல் பேருந்துகள் சென்று விடுவதால், மறுமுனையில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் ஏமாற்றமடைகின்றனர். பேருந்து நிலைய வளாகமும் கேட்பாரற்று உள்ளது.

எனவே, புனரமைத்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.






      Dinamalar
      Follow us