/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாங்காடில் வீடு புகுந்து 9 சவரன் கொள்ளை
/
மாங்காடில் வீடு புகுந்து 9 சவரன் கொள்ளை
ADDED : அக் 02, 2024 12:21 AM
குன்றத்துார்,
மாங்காடு அருகே பெரிய கொளுத்துவாஞ்சேரி, அபிராமி நகரை சேர்ந்தவர் நிக்கில் ஜான்,55.
இவரது தங்கை திருமணத்திற்கு புதிய நகைகளை செய்ய வீட்டில் இருந்த 39 சவரன் நகையில், 30 சவரனை நகைகளை எடுத்துக்கொண்டு, கேரளமா மாநிலம், திருவனந்தபுரத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது, பூட்டு உடைக்கப்பட்டு பிரோவில் வைக்கப்பட்டிருந்த 9 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்படி, மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் சரோஜா, 88. மகள் வெளியூரில் உள்ளதால், தனியாக வசித்து வந்தார்.
கடந்த 20ம் தேதி, இவரது வீட்டில் இருந்து, 10 சவரன் நகை திருடப்பட்டது.
திருவான்மியூர் போலீசார் விசாரணையில், திருவான்மியூரைச் சேர்ந்த மனோகரன், 30, ராஜேஷ், 49 மற்றும் புவனேஷ்வரி, 32, ராஜாமணி, 49, ஆகியோர் திருடியது தெரிந்தது.
ராஜாமணி, கடந்த மாதம் சரோஜா வீட்டில் தோட்ட வேலை செய்ய சென்றுள்ளார். அப்போது, சரோஜா தனியாக இருப்பதை தெரிந்து, உறவினர்களை அழைத்து சென்று நகை திருடியுள்ளார். நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.