/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தகர ' ஷீ ட்'டில் மகளிர் காவல் நிலையம் இடநெருக்கடியில் மாங்காடு போலீசார்
/
தகர ' ஷீ ட்'டில் மகளிர் காவல் நிலையம் இடநெருக்கடியில் மாங்காடு போலீசார்
தகர ' ஷீ ட்'டில் மகளிர் காவல் நிலையம் இடநெருக்கடியில் மாங்காடு போலீசார்
தகர ' ஷீ ட்'டில் மகளிர் காவல் நிலையம் இடநெருக்கடியில் மாங்காடு போலீசார்
ADDED : பிப் 17, 2024 12:28 AM

குன்றத்துார், மாங்காடு காவல் நிலைய கட்டடத்தில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட போரூர் எஸ்.ஆர்.எம்.சி., சரகத்தின் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது.
இக்கட்டடத்தின் கீழ்புறம் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில், தடுப்புச்சுவராக தகர ஷீட்கள் பொருத்தி, மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், பெண் போலீசார் இடநெருக்கடியில் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால், பெண் போலீசார் அருகே உள்ள பொது கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், காவல் நிலையத்தின் தகர ஷீட்களால் அனல் வீசுகிறது. இதனால், புழுக்கத்தில் பெண் போலீசார் தவித்து வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மாங்காடு, போரூர் எஸ்.ஆர்.எம்.சி., திருவேற்காடு ஆகிய மூன்று காவல் நிலைய எல்லையில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் குறித்து, மாங்காட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கின்றனர்.
இங்கு, ஒரு பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில், 16 பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர். அடிப்படை வசதி இல்லாததால், பெண் போலீசார் மட்டுமின்றி, வழக்கு விசாரணை தொடர்பாக செல்வோரும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
போதிய இடவசதியுடன் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை, வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.