/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் சாய்ராம் கல்லுாரி அணி வெற்றி
/
மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் சாய்ராம் கல்லுாரி அணி வெற்றி
மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் சாய்ராம் கல்லுாரி அணி வெற்றி
மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் சாய்ராம் கல்லுாரி அணி வெற்றி
ADDED : ஏப் 10, 2025 11:37 PM

சென்னை,ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி சார்பில், 14ம் ஆண்டு மஞ்சுளா முனிரத்தினரம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள கல்லுாரி மைதானத்தில் நடக்கின்றன.
இதில், ஸ்ரீவெங்கடேஸ்வரா, அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே., சத்தியபாமா, சவீதா, வி.ஐ.டி., மற்றும் லயோலா உள்ளிட்ட, 19 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை நடந்த நாக் அவுட் போட்டியில், வேலம்மாள் கல்லுாரி அணி மற்றும் கிண்டி மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் கல்லுாரி அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற வேலம்மாள் அணி, முதலில் பேட்டிங் செய்து, 17 ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு, 122 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் அணி, 10.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 81 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.
மற்றொரு போட்டியில், டாஸ் வென்ற சாய்ராம் அணி, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு, 192 ரன்களை அடித்தது. அணியின் வீரர் யுவனேஷ்வரன் 96 ரன்களும், ரோஹன் 53 ரன்களும் அடித்தனர்.
அடுத்து பேட்டிங் செய்த ஆர்.எம்.கே., அணி, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 146 ரன்களை அடித்து தோல்வியடைந்தது. இதனால், 46 ரன்கள் வித்தியாசத்தில், சாய்ராம் கல்லுாரி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.