ADDED : நவ 28, 2026 05:20 PM

அ நிறம் | அளவு
சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, மாரத்தான் மற்றும் சைக்கிள் போட்டி, இன்று (நவ.,28) நடந்தது.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில், மாரத்தான் ஓட்டம் மற்றும் சைக்கிள் போட்டி, மெரினா கடற்கரை சாலையில், அண்ணா சதுக்கம் பகுதியில் இன்று நடத்தப்பட்டது.
இப்போட்டியை, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 715 பேர் மாரத்தானிலும், 150 பேர் சைக்கிள் போட்டியிலும் என, மொத்தம், 865 மாணவ – மாணவியர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
