sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மார்கழி இசை கச்சேரி - கீர்த்தி -- காதலின் அடர்த்தி, ஆழம் எவ்வளவு? பரதத்தில் எளிதாக புரியவைத்த கீர்த்தி

/

மார்கழி இசை கச்சேரி - கீர்த்தி -- காதலின் அடர்த்தி, ஆழம் எவ்வளவு? பரதத்தில் எளிதாக புரியவைத்த கீர்த்தி

மார்கழி இசை கச்சேரி - கீர்த்தி -- காதலின் அடர்த்தி, ஆழம் எவ்வளவு? பரதத்தில் எளிதாக புரியவைத்த கீர்த்தி

மார்கழி இசை கச்சேரி - கீர்த்தி -- காதலின் அடர்த்தி, ஆழம் எவ்வளவு? பரதத்தில் எளிதாக புரியவைத்த கீர்த்தி


ADDED : டிச 23, 2024 12:50 AM

Google News

ADDED : டிச 23, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவனின் அலங்காரம், தோற்றம் குறித்த 'மஹாதேவா சிவ சம்போ' பாடலில், தன் உருப்படியை சிவனுக்கு அஞ்சலியாக சமர்ப்பித்து, நாரத கான சபாவில் நாட்டியத்தை துவக்கினார் கீர்த்தி ராம்கோபால்.

அலாரிப்புக்கு உண்டான பிரத்யேக உத்திகளையும், அடவுகளையும், சிவனின் ஆடல் அசைவுக்கு ஏற்றார்போல், நடனம் அமைத்திருந்தது பாராட்டு பெற்றது.

பின், தன்னோட நாயகனை தேடும் நாயகி பற்றி பதவர்ணம் நிகழ்த்தப்பட்டது. பொதுவாக பதவர்ணம் இரு பிரிவாக பிரியும். முதல் பகுதி காதலின் அடர்த்தி; இரண்டாம் பகுதி காதலின் ஆழம்.

மேடையெங்கும் ஓடி ஓடி நாயகனை தேடுகிறாள் நாயகி. அதற்கு, அடாணா ராக வர்ணம் துவங்கியது. நாயகனின் நினைப்பில் மூழ்கி கவலை தோய்ந்த முகமும் சஞ்சாரியாக பரிணமித்தது.

நாயகி எடுத்து வரும் எரியும் விளக்கை, காதலன் ஊதி அணைக்கிறான். 'அந்த நிலவு ஒளியே இருக்க இந்த சுடர் எதற்கு' என, அவளிடம் கேள்வி எழுப்பி, நாயகியை ஆரத்தழுவுகிறான்.

அப்போது, முன் பின் சமகால ஜதிகள் விறுவிறுப்பாக அமைய, காஞ்சிபுரத்தில் வீற்றிருப்பவனை நாயகனாக உணர்த்தி ஸர்ப்ப நடையுடன் முத்தாயிஸ்வரத்திற்கு நகர்ந்தது நாட்டியம்.

இரண்டாவது பகுதியாக, கண்ணனின் மாய விளையாட்டுகளையும், அவன் கண்ணால் வலைவீசி தன் மனதை ஆட்கொண்டதையும் உணர்ந்துகொண்ட தலைவி, தன்னை நாயகனிடமே ஒப்படைத்து விடுகிறாள்.

நாயகன், நாயகியின் காதலை வெளிப்படுத்திய இந்த வர்ணம் நிறைவடைய, கமாஸ் ராக ஜாவளி ஆரம்பித்தது. பார்த்தவுடனே காதல் என்பதே இது!

தோழிகளோடு வெளியில் செல்லும் நாயகி, நாயகனை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறாள். அவனின் அருமைகளையம், பெருமைகளையும் வெட்கம் கலந்த புன்சிரிப்புடன் தோழிகளிடம் கூறியதை, நாட்டியத்தில் கீர்த்த வெளிப்படுத்தியது அற்புதமாக இருந்தது.

இந்த இடத்தில், கதை விளக்கங்களையும், கதாபாத்திரத்தின் வேற்றுமையையும் பக்கவாத்திய இசை கலைஞர்களான நட்டுவாங்கம் பிரசன்னகுமார், நந்தகுமார் உன்னிகிருஷ்ணன் - பாட்டு; ஜெனார்த்தனராவ் மிருதங்கம்; மகோஸ்வாமி புல்லாங்குழல் ஆகியோர், எளிமையாக அனைவருக்கும் புரியவைத்தனர்.

அடுத்ததாக, கிருஷ்ணரை பற்றி தாய் கூற்று. ஹரிதாசாவுடைய யமன் ராக, மிஸ்ரசாபு தாள, கிருஷ்ண பேகடே பாடல் வந்தது. நம் வீட்டில் நடக்கும் உறவுச்சுடர் போலவே இருந்தது. மகனிற்கு வெண்ணையை ஊட்டுவதும், மகனை குளிப்பாட்டி சீராட்டி பாசம் மழை பொழிவதையும் அழுத்தமாக காட்டியது.

முடிவில் தமிழ் கடவுள் முருகனை போற்றும் சாஹித்ய வரிகளை உடைய சிம்மேந்திர மத்தியம் தில்லானாவோடு தன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கீர்த்தி.

மா.அன்புக்கரசி






      Dinamalar
      Follow us