ADDED : நவ 26, 2024 12:32 PM

தேசிய தற்காப்புக் கலை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
தெலுங்கானா மாநிலம், இரட்டை நகரம் வாரங்கள் அனமகொண்டா நகரில் நியூ பேரடைஸ் அரங்கில் கிராண்ட்மாஸ்டர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கிஷாமி விளையாட்டு கழகத்தின் 9 வது போட்டியில் பலர் பங்கேற்றனர்.
பரிசு பெற்றவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் மாஸ்டர் தன்ராஜ்க்கு சர்வதேச மஞ்சூரியா குங்பூ தற்காப்புக் கலையின் கிராண்ட்மாஸ்டர் ஹிங் ஷிபூ ஆர் சேகரின் நினைவாக வழங்கப்படும் போதிதர்மர் வாழ்நாள் சாதனையாளர் விருதை மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வழங்கினார்.
விழாவில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். அதில், 75 சதவீதம் பெண் வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழக வீரர்கள் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றனர். விழாவில், நட்சத்திர பயிற்சியாளர்கள் ஷிஃபூ ஜோதி ராமலிங்கம் மோகன் சந்தோஷ் ராஜேஷ் நரேஷ் சுரேஷ் ரோஷன் சத்திய முத்து நாகர்கோவில் அதின் மணிகண்டன் சத்தீஷ் கொண்டையன் பொன் வானதி பரத் அரிஷ் நித்திஷ்குமார் அரிஅன்சாய் நித்தீஷ் ஜெய்ஷினி கோபிகாஶ்ரீ ஜெசிகா திரிவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
