ADDED : பிப் 09, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்ணாரப்பேட்டை, தமிழக கவர்னரின் அத்துமீறலுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், மாவட்ட செயலர் சுந்தர்ராஜன் தலைமையில் நேற்று, வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டணி கட்சியினரும் இணைந்து பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

