ADDED : மே 29, 2026 03:30 AM
அ நிறம் | அளவு
சென்னை: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு, அக்கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலர் செல்வா தலைமை வகித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், பா.ஜ., அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
