sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பரந்துார் விமான நிலைய திட்டத்துக்காக மறுகுடியமர்வுக்கு 'மாஸ்டர் பிளான்' தயாரிப்பு

/

பரந்துார் விமான நிலைய திட்டத்துக்காக மறுகுடியமர்வுக்கு 'மாஸ்டர் பிளான்' தயாரிப்பு

பரந்துார் விமான நிலைய திட்டத்துக்காக மறுகுடியமர்வுக்கு 'மாஸ்டர் பிளான்' தயாரிப்பு

பரந்துார் விமான நிலைய திட்டத்துக்காக மறுகுடியமர்வுக்கு 'மாஸ்டர் பிளான்' தயாரிப்பு


ADDED : ஜன 19, 2025 12:28 AM

Google News

ADDED : ஜன 19, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு, 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், 'டவுன்ஷிப்' உருவாக்கி தரப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு, 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்ட அறிக்கையை உருவாக்கி தரும் பணிக்கு ஆலோசகராக, 'நைட் பிராங்' நிறுவனத்தை, 'டிட்கோ' நியமித்துள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணியர் மற்றும் சரக்கு கையாளுவது அதிகரித்து வருகிறது. எனவே, சென்னை இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக பரந்துார் விமான நிலையம், மாநில அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.

பரந்துார் விமான நிலையத்திற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றிய, 20 கிராமங்களில், 5,320 ஏக்கர் தேவை. அதில், தனியார் வசம் உள்ள, 3,600 ஏக்கர் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.

நிலம் எடுக்க திட்டமிட்டுள்ள இடங்களில், நான்கு கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர். இத்திட்டத்தால் பாதிக்கப்படும், 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வேறு இடத்தில் மறு குடியமர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்காக, 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி, குடிநீர் வழங்கல், மருத்துவமனை, சாலை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய, 'டவுன்ஷிப்' எனப்படும் புதிய நகரம் உருவாக்கி தரப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த, 'மாஸ்டர் பிளான்' எனப்படும், முழுமை திட்ட அறிக்கை தயாரித்து தரும் பணிக்கு, ஆலோசகரை தேர்வு செய்ய டிட்கோ, 2024 செப்டம்பரில், 'டெண்டர்' கோரியது.

அதில் பங்கேற்ற நிறுவனங்களின் ஆவணங்களை பரிசீலனை செய்ததில், தற்போது, 'நைட் பிராங்க்' நிறுவனம் தேர்வாகியுள்ளது. இந்நிறுவனத்திடம், மாஸ்டர் பிளான் தயாரித்து வழங்கும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனம், தன் பணிகளை துவக்கியுள்ளது. இது, இரண்டு - மூன்று கருத்துரு அடங்கிய அறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும். அதில் ஒன்றை தேர்வு செய்து அதற்கு ஏற்ப, 'டவுன்ஷிப்' உருவாக்கப்பட உள்ளது.

டவுன்ஷிப் உருவாக்கும் பணி முடிவடையும் வரை, நைட் பிராங்க் நிறுவனம், டிட்கோவுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

4 கட்டமாக திட்டம்

பரந்துார் விமான நிலைய திட்டம், நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. திட்ட செலவு, 29,150 கோடி ரூபாய். முதல் கட்ட கட்டுமான பணியை, 2026 ஜனவரியில் துவக்கி, 2028ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து ஆண்டுக்கு, இரண்டு கோடி பயணியரையும், இறுதி கட்ட பணிகள் முடிவடையும் போது ஆண்டுக்கு 10 கோடி பயணியரையும் கையாளும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. *








      Dinamalar
      Follow us